உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… மகுடம் சூடினார் விஸ்வநாதன் ஆனந்த்

உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி… மகுடம் சூடினார் விஸ்வநாதன் ஆனந்த்

ரியாத்: துபாயின் ரியாத்தில் நடந்த உலக ராபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார். ரஷ்யாவின் ‘விளாடிமிர் பெடோசேவ்’ என்பவரை டை பிரேக்கர் சுற்றில் வீழ்த்தி இவர் சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார்.

துபாயில் கடந்த சில நாட்களாக உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டு இருந்தார். தற்போது இவருக்கு 48 வயது முடிந்து இருக்கிறது.

உலக செஸ் சாம்பியன்ஸ் ஷிப் போட்டியில் தன்னை வீழ்த்திய நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை இந்த தொடரின் தொடக்கத்திலேயே அவர் வீழ்த்தினார். அதன்பின் இறுதி போட்டிக்கு இவரும் ரஷ்யாவை சேர்ந்த விளாடிமிர் பெடோசேவும் தேர்வாகி இருந்தனர்.

இருவரும் 10.5 புள்ளிகள் பெற்று இருந்த காரணத்தால் யார் சாம்பியன் என்பதை தீர்மானிப்பதற்காக ‘டை பிரேக்கர்’ சுற்று வைக்கப்பட்டது. இந்த சுற்றில் சிறப்பாக விளையாடிய ஆனந்த் 2-0 என்ற புள்ளி கணக்கில் தன்னை விட 26 வயது குறைந்த விளாடிமிர் பெடோசேவை எளிதாக வீழ்த்தினார்.
இதன் மூலம் செஸ் போட்டிகளில் ஆனந்த் மீண்டு வந்து இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *